பீகார்: கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு
பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தது.
பாட்னா,
பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் தருணத்தை அப்பகுதி மக்கள் வீடியோவில் பதிவு செய்தனர். பாலம் இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும்
பாலம் கட்டுவதற்கான செலவு சுமார் ரூ. ரூ.1,750 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் காலை 6 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக 'புல் நிர்மான் நிகாம்' நிறுவனத்திடம் உள்ளூர் நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளதாக டிடிசி பகல்பூர் குமார் அனுராக் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story