நாட்டின் வரலாற்றை மூடிமறைக்க பா.ஜனதா முயற்சி வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு
நாட்டின் வரலாற்றை மூடிமறைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக வீரப்ப மொய்லி குற்றம் சாட்டியுள்ளார்.
கோலார் தங்கவயல்:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூரில் அம்பேத்கர் சேவா அமைப்பு சார்பில் மனித சமுதாயமும், அதன் உரிமைகள் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சமூக சிந்தனையாளர் பேராசிரியர் பி.கங்காதரமூர்த்தி என்பவர் சாட்சி ஆதாரங்களுடன் இந்திய சரித்திரத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை எதிர்த்து தடுக்க நாம் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். ஆதாரங்கள், ஓவியங்கள் மூலம் இந்திய சரித்திரத்தை நமக்கு கூறி கங்காதரமூர்த்தியின் வழிகாட்டுதலின் பேரில் நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிவசங்கர் ரெட்டி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.