பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது; இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகியது பற்றி சிவசேனா கருத்து
தோல்வி பயத்தால் பா.ஜனதா இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல பா.ஜனதா சார்பில் முர்ஜி பட்டேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்தநிலையில் ருதுஜா லட்கே போட்டியின்றி தேர்வாகும் வகையில் பா.ஜனதா தனது வேட்பாளரை திரும்ப பெற வேண்டும் என ராஜ் தாக்கரே, சரத்பவார் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் இடைத்தேர்தலில் திடீர் திருப்பதாக பா.ஜனதா அவர்களது வேட்பாளரை திரும்ப பெற்றது. பா.ஜனதா வேட்பாளர் முர்ஜி பட்டேல் அவரதுவேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.இந்தநிலையில் தோல்வி பயம் காரணமாகவே பா.ஜனதா வேட்பாளரை திரும்ப பெற்றதாக சிவசேனா தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story