மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டும்: பா.ஜனதா கட்சியினருக்கு மோடி அறிவுரை.
மக்களுக்காக ஒய்வின்றி பாஜகவினர் உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் ஜே.பி., நட்டா, அமித்ஷா, கிரண் ரிஜிஜூ, நிர்மலா சீதாராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்தக் கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் புதுப்பித்தல், சான்று வழங்கிடல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் மக்களுக்காக ஒய்வின்றி பணி செய்ய வேண்டும். ஜனநாயக பாதையை பின்பற்றி முதலில் நம் தேசம் என்பதை கொள்கையாக கொண்டு செயல்பட வேண்டும். வரும் தேர்தல்களில் அதிகபட்சமாக பெண்கள் வாக்களிக்க வைப்பதை ஊக்கவிக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்த்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story