இடஒதுக்கீடு தீர்ப்பு: பிரதமரின் சமூகநீதி லட்சியத்துக்கு கிடைத்த வெற்றி - பா.ஜனதா வரவேற்பு


இடஒதுக்கீடு தீர்ப்பு: பிரதமரின் சமூகநீதி லட்சியத்துக்கு கிடைத்த வெற்றி - பா.ஜனதா வரவேற்பு
x

கோப்புப்படம்

இடஒதுக்கீடு செல்லும் என்று அறிவித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பிரதமரின் சமூகநீதி லட்சியத்துக்கு கிடைத்த வெற்றி என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை பா.ஜனதா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் கூறியதாவது:-

இடஒதுக்கீடு பெறாத பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இது, ஏழைகள் குறித்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த பெருமை. சமூகநீதி பயணத்தில் மிகப்பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் சி.டி.ரவி, ''இந்திய ஏழை மக்களுக்கு சமூகநீதி வழங்கும் பிரதமர் மோடியின் லட்சியத்துக்கு இது மற்றொரு வெற்றி'' என்று கூறியுள்ளார்.


Next Story