திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்.பி. - பரபரப்பு
மேற்குவங்காளத்தை சேர்ந்த பாஜக எம்.பி. மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் பாரக்புரா தொகுதி பாஜக எம்.பி. அர்ஜூன் சிங். ஆரம்பத்தில் திரிணாமுல் காங்கிரசில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அர்ஜூன் சிங் கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன்பின் அவர் பாரக்புரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அர்ஜூன் சிங் எம்.பி. பாஜகவில் இருந்து விலகி இன்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அர்ஜூன் சிங் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
Related Tags :
Next Story