பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சித்ரதுர்கா வருகை
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வியாழக்கிழமை) சித்ரதுர்காவுக்கு வர உள்ளதாக மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:-
பா.ஜனதா தேசிய தலைவர்
சித்ரதுர்காவில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்ரதுர்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (அதாவது இன்று) வருகை தர உள்ளார். டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சித்ரதுர்காவுக்கு வருகிறார்.
சிேரதுர்கா டவுனில் உள்ள ஒனக ஒபவ்வா, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் முருக மடத்தில் உள்ள அனுபவ மண்டபத்தில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
இதையடுத்து சித்ரதுர்காவில் உள்ள மாதாரசன்னையா, சிரிகிரி மடங்களுக்கு சென்று அங்கு மடாதிபதிகளை சந்தி்த்து ஆசீர்வாதம் பெறுகிறார். இரவு 7 மணிக்கு தாவணகெரேவில் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளி, திப்பாரெட்டி எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர். கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஜே.பி.நட்டாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
பா.ஜனதா தேசிய தலைவர் ேஜ.பி.நட்டாவின் வருகையையொட்டி சித்ரதுர்கா நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.