பாஜக தலைவர் கபில் மிஸ்ரா டெல்லி பிரிவு துணைத் தலைவராக நியமனம்..!
பாஜக தலைவர் கபில் மிஸ்ரா டெல்லி பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை டெல்லி பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிஸ்ராவை நியமித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, "இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரது பெயர் இருப்பதாகவும், ஆனால் சில காரணங்களால் அதை அறிவிக்க முடியவில்லை" என்றும் கூறினார்.
இந்துத்துவா சித்தாந்தம் குறித்த அவரது "தீவிரமான" பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மிஸ்ரா, பாஜகவில் இணைந்ததில் இருந்து அவருக்கு டெல்லி பிரிவில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. கடந்த ஜூலை 29 அன்று, பாஜக அமைப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்பை அறிவித்தது. பாஜகவின் மத்தியப் பொறுப்பாளர்கள் பட்டியலை, தலைவர் ஜேபி நட்டா மறுசீரமைத்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் இருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) மகளிர் அணித் தலைவர் ரிச்சா பாண்டேவுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.