பாஜக தலைமையிலான அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம்- மம்தா பானர்ஜி சூளுரை
வெள்ளையனே வெளியேறு நாளில்,பாஜக தலைமையிலான அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், மகாத்மா காந்தி சிலைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம்.மணிப்பூரில் உள்ள பழங்குடியினரை மத்திய அரசு புறக்கணிக்கின்றது. வெள்ளையனே வெளியேறு நாளில், பாஜகவை நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என நாங்கள் உறுதி கூறுகிறோம்.
இனக்கலவரத்தால் மணிப்பூரில் பழங்குடியினர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அவர்களின் அவல நிலையைக் கேட்க யாரும் இல்லை.
இந்தியாவில் பட்டியில் இனமக்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. மேற்கு வங்கத்தை மத்திய அரசு புறக்கணிப்பதை எதிர்த்து நாங்கள் போராடுவோம். அதே நேரத்தில் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.