குஜராத்தில் போதைப்பொருள் 'மாபியா'வுக்கு பா.ஜனதா ஆதரவு - ராகுல்காந்தி, பிரியங்கா குற்றச்சாட்டு


குஜராத்தில் போதைப்பொருள் மாபியாவுக்கு பா.ஜனதா ஆதரவு - ராகுல்காந்தி, பிரியங்கா குற்றச்சாட்டு
x

குஜராத்தில் போதைப்பொருள் ‘மாபியா' கும்பலுக்கு பா.ஜனதா அரசு ஆதரவு அளிப்பதாக ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் குற்றம் சாட்டினர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், இந்த ஆண்டு மே மாதம் ரூ.500 கோடி போதைப்பொருட்களும், ஜூலை மாதம் ரூ.375 கோடி போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

ஏற்கனவே போதைப்பொருள் பிடிபட்ட நிலையில், அதே துறைமுகத்துக்கு மீண்டும் மீண்டும் போதைப்பொருள் வந்து இறங்குவது ஏன்? குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு உள்ளதா? மாபியா கும்பலுக்கு சட்டம் குறித்த பயம் இல்லையா? அல்லது போதைப்பொருள் மாபியாவுக்கு பா.ஜனதா அரசு ஆதரவு அளிக்கிறதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரே துறைமுகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளன. ஆனால், ஊடகங்களும், அரசு விசாரணை அமைப்புகளும் மவுனம் சாதிக்கின்றன. பா.ஜனதா அரசின் மூக்குக்கு கீழ் இருந்தபடி, நாடு முழுவதும் போதைப்பொருளை மாபியா கும்பல் வினியோகிக்கிறது. அந்த கும்பலுக்கு அரசும் உடந்தையா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story