'அக்னிபத்' திட்டம் மூலம் பா.ஜனதாவுக்கென ஆயுதப்படை உருவாக்க முயற்சி - மம்தா பானர்ஜி சொல்கிறார்
‘அக்னிபத்’ திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-
'அக்னிபத்' திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது.4 ஆண்டு கால பணிக்கு பிறகு அக்னி வீரர்கள் என்ன செய்வார்கள்?
அவர்கள் கையில் ஆயுதங்களை கொடுக்க பா.ஜனதா விரும்புகிறது. அவர்களை தங்கள் கட்சி அலுவலக காவலாளிகளாக நியமிக்க பா.ஜனதா திட்டமிடுகிறது போலும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக இத்தகைய திட்டங்களை அறிவித்து மக்களை பா.ஜனதா முட்டாளாக்க பார்க்கிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது முட்டாள்தனமான அறிவிப்புகளை வெளியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story