கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்


கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்
x
தினத்தந்தி 27 Nov 2022 3:02 AM IST (Updated: 27 Nov 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

கோலார் தங்கவயல்-

சிக்பள்ளாப்பூர் தாலுகா மஞ்சேனஹள்ளி கிராமத்தில் நேற்று கிராம தங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மந்திரி ஆர்.அசோக் கலந்துகொண்டார். அவருடன் மந்திரிகள் சுதாகர், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோரும் வந்தனர். அப்போது அவர்களுக்கு பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரேன் மூலம் பிரமாண்ட மலை அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் மந்திரிகளை வரவேற்றனர்.

இதையடுத்து அங்கு மந்திரி ஆர்.அசோக் பேசியதாவது:-

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். மக்கள் பா.ஜனதா பக்கம் உள்ளனர். எங்கு சென்றாலும் மக்கள் ஆதரவு உள்ளது. பசவராஜ் பொம்மை மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.

அனைத்து தொகுதிகளுக்கும் போதுமான நிதியை ஒதுக்கி உள்ளார். மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 2 ஆண்டு வளர்ச்சி பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.


Next Story