ராஜகால்வாய்க்குள் விழுந்த பொக்லைன் எந்திரம்
பெங்களூரு ராஜாஜிநகரில் ராஜகால்வாய்க்குள் விழுந்த பொக்லைன் எந்திரத்தை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர்.
பெங்களூரு
பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக் 72-வது கிராசில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது மைதானத்தையொட்டியுள்ள ராஜகால்வாய் மீது பொக்லைன் எந்திரம் நின்று கொண்டு இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் சிமெண்டு சிலாப்பு இடிந்து பொக்லைன் எந்திரம் ராஜகால்வாய்க்குள் விழுந்தது. இதில் ெபாக்லைன் எந்திரத்தின் கண்ணாடியில் விரிசல் விழுந்தது. மேலும் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ராஜகால்வாயில் சிக்கி இருந்த பொக்லைன் எந்திரம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story