பாகண்டேஸ்வரர் கோவிலில் பொலிங்கா திருவிழா கோலாகலம்


பாகண்டேஸ்வரர் கோவிலில் பொலிங்கா திருவிழா கோலாகலம்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டம் பாகமண்டலாவில் உள்ள பாகண்டேஸ்வரர் கோவிலில் பொலிங்கா திருவிழா கோலாகலமாக நடந்தது.

குடகு-

குடகு மாவட்டம் பாகமண்டலாவில் உள்ள பாகண்டேஸ்வரர் கோவிலில் பொலிங்கா திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொலிங்கா திருவிழா

குடகு மாவட்டம் பாகமண்டலாவில் உள்ளது பாகண்டேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் மகா கணபதி, மகாவிஷ்ணு, சுப்பிரமணிய சாமி, வெங்கடேஸ்வரா சாமிகள் உள்ளது. ஆண்டுதோறும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இந்த பாகண்டேஸ்வரருக்கு மக்கள் சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இதற்கு பொலிங்கா திருவிழா என்று பெயர். இந்த பொலிங்கா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையையொட்டி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் பாகண்டேஸ்வரர் கோவிலில் பொலிங்கா பூஜை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் வாழை தண்டால் செய்யப்பட்ட மண்டபத்தில் தீபம் ஏற்றி, தாலி, வளையல், சேலை, வெள்ளி தகடு ஆகியவற்றை வைத்து, பாகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.

திரிவேணி சங்கமத்தில் பூஜை

இதையடுத்து அந்த வாழை தண்டால் செய்யப்பட்ட மண்டபத்தை, கையில் எடுத்து கொண்டு, பாகண்டேஸ்வரர் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் அவர்கள் பாகமண்டலாவில் உள்ள திரிவேணி சங்கமத்திற்கு சென்று அங்கு பூஜை செய்து இறைவனை வழிப்பட்டனர். இதையடுத்து அந்த திரிவேணி சங்கமத்தில் அந்த வாழை தண்டை மிதக்கவிட்டனர்.

பின்னர் திரிவேணி சங்கமத்தில் இருந்து பாகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், அங்கு நடந்த பூஜையில் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். அப்போது நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும், விவசாயம் மற்றும் நாட்டு மக்கள் செழிப்படையவேண்டும் என்றும் பக்தர்கள் வேண்டி கொண்டனர்.


Next Story