டெல்லியில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
புதுடெல்லி,
கடந்த 2-ந்தேதி டெல்லியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள 3 பள்ளிகளுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு இன்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள புராரி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story