இந்தூர் விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்


இந்தூர் விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
x

இந்தூர் விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேவி அகல்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திற்கு நேற்று மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். விமான நிலையத்தில் சிலர் வெடிகுண்டு வைக்கப்போவதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்தூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உள்ளூர் காவல்துறை மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சட்டப்பிரிவு 507-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story