பிரதமர் மோடி குறித்த புத்தகத்தை மேலாண்மை பாடப்புத்தகமாக பயன்படுத்தலாம்- நிர்மலா சீதாராமன்


பிரதமர் மோடி குறித்த புத்தகத்தை மேலாண்மை பாடப்புத்தகமாக பயன்படுத்தலாம்- நிர்மலா சீதாராமன்
x

Image Courtesy: Twitter @mipravindarekar

'மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தகம் குறித்த நிகழ்வில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினர்.

மும்பை,

பிரதமர் மோடி குறித்த "மோடி@20: ட்ரிம்ஸ் மீட் டெலிவரி" என்ற புத்தகத்தை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த மே மாதம் வெளியிட்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்த இந்த புத்தகத்தை மேலாண்மை பாடப்புத்தகமாக பயன்படுத்தலாம் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார். மும்பை பாஜக பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தகம் குறித்த நிகழ்வில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினர்.

அப்போது பேசிய நிதி மந்திரி கூறுகையில், " இந்தியா போன்ற நாடுகளில் சிக்கலான பொருளாதார சூழ்நிலைகளில் நவீன கால ஆட்சி எப்படி நடக்கும் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலம் தலைவர்கள் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தைப் பற்றி பேசிய அவர், ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களும் நாட்டின் கடைசி மைல் பயனாளிகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கிடைக்கப் பெறுவதாக கூறினார்.


Next Story