2 ஆண்டுகளில் 11 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் - மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தகவல்


2 ஆண்டுகளில் 11 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் - மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தகவல்
x

௨ ஆண்டுகளில் ௧௧ ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு:

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தனது துறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை பெங்களூருவில் நேற்று நடத்தினார். இதில் கோட்டா சீனிவாச பூஜாரி பேசியதாவது:-

கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காக சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களின் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு போய் சேர வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்த தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் வாரியங்கள் மூலம் 11 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. மாவட்டங்களுக்கு தலா 60 ஆழ்துளை கிணறுகளும், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா 41 ஆழ்துளை கிணறுகளை தோண்ட அனுமதி அளிக்கப்படுகிறது. பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வரவு வைக்கப்படுகிறது. அனைத்து வாரியங்களின் திட்ட பயன்களை வழங்க பயனாளிகளை சுவிதா செயலி மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறது.

இவ்வாறு கோட்டா சீனிவாச பூஜாரி பேசினார்.


Next Story