கடவுள் விநாயகர் சிலையை கரைக்க செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரியில் மூழ்கி சிறுவன் பலி


கடவுள் விநாயகர் சிலையை கரைக்க செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
x

Image Courtesy: HindustanTimes

கடவுள் விநாயகர் சிலையை கரைக்க செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் கடவுள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ரபொடி பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கையாக ஏரி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த ஏரியில் நேற்று இரவு 8 மணியளவில் அதேபகுதியை சேர்ந்த ஜஹித் அசா ஷேக் என்ற 7 வயது சிறுவன் குளிக்க சென்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story