ஜார்கண்டில் பழங்குடியின பள்ளி மாணவியை எட்டி உதைத்த மாணவன்: நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி உத்தரவு
பழங்குடியின பள்ளி மாணவியை, மாணவர் ஒருவர் தொடர்ந்து காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவியை, மாணவர் ஒருவர் தொடர்ந்து காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் சிறுமி பள்ளி சீருடையில் பள்ளிப் பையை ஏந்தியவாறு காணப்படுகிறார்.
இந்த சம்பவம் அம்மாநில முதல் மந்திரியின் கவனத்திற்கு வந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியை உதைத்தது தும்கா மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது தெரியவந்தது. இது காதல் விவகாரம் போல தெரிவதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story