பெங்களூரு இந்திய அறிவியல் கழக வளாகத்தில் ரூ.280 கோடி செலவில் மூளை ஆராய்ச்சி மையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்


பெங்களூரு இந்திய அறிவியல் கழக வளாகத்தில்  ரூ.280 கோடி செலவில் மூளை ஆராய்ச்சி மையம்-  பிரதமர் மோடி திறந்து வைத்தார்
x

பெங்களூருவில், இந்திய அறிவியல் கழக வளாகத்தில் ரூ.280 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

பெங்களூரு: பெங்களூருவில், இந்திய அறிவியல் கழக வளாகத்தில் ரூ.280 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மூளை ஆராய்ச்சி மையம்

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இந்திய அறிவியல் கழக வளாகத்தில் ரூ.280 கோடி செலவில் மூளை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தை , பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் 832 படுக்கை வசதிகளுடன் அமைய உள்ள பக்‌ஷி பார்த்தசாரதி பன்நோக்கு ஆஸ்பத்திரியின் கட்டுமான பணியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசுகையில், ஒவ்வொரு நாடும் சுகாதார பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. மூளை ஆராய்ச்சியில் இந்த மையம் முன்னணியில் இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்டு உள்ள மூளை ஆராய்ச்சி மையம், மூளையின் ஆராய்ச்சி மற்றும் வயது தொடர்பான மூளையின் கோளாறுகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரூ.425 கோடி நன்கொடை

மேலும் 832 படுக்கை வசதிகளுடன் அமைய உள்ள பன்நோக்கு ஆஸ்பத்திரி கட்ட இந்திய அறிவியல் கழகம் சுஷ்மிதா- சுப்ரோடோ பக்‌ஷி, ராதா-பார்த்தசாரதி தம்பதியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்காக தம்பதியினர் ரூ.425 கோடி நன்கொடையாக வசூலித்து கொடுப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆஸ்பத்திரி கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும், 2024-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த ஆஸ்பத்திரி செயல்பட தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Related Tags :
Next Story