திருமண நிகழ்வில் துப்பாக்கி சூடு: மணப்பெண்ணின் சகோதரி உயிரிழப்பு - 10 பேர் காயம்


திருமண நிகழ்வில் துப்பாக்கி சூடு: மணப்பெண்ணின் சகோதரி உயிரிழப்பு - 10 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Jun 2022 3:36 AM IST (Updated: 12 Jun 2022 3:38 AM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்வில் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில் மணப்பெண்ணின் சகோதரி உயிரிழந்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் பார்த்பூர் கிராமம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதில் பயன்படுத்தும் வண்ணம் தொடர்பாக மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கும், கிராமத்தார் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். அதில், மணப்பெண்ணின் மூத்த சகோதரி குண்டு காயம் அடைந்து உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story