நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ம் தேதி தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ம் தேதி தொடங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மொத்த 27 அமர்வுகள் 67 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டில் முதல் கூட்டத் தொடரில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். மேலும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிப்.14 முதல் மார்ச் 12-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகின்றது. இதன் பிறகு தொடங்கும் கூட்டத் தொடரில் மார்ச் முதல் ஏப்ரல் வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story