தீபாவளிக்கு பட்டாசு வெடித்து 150 பேருக்கு காயம்


தீபாவளிக்கு பட்டாசு வெடித்து   150 பேருக்கு காயம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளிக்கு பட்டாசு வெடித்து 150 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு மட்டும் இல்லாமல், அதன்பிறகும், பெங்களூருவில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் பட்டாசுகள் வெடித்து கடந்த 4-ந் தேதி வரை 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக மிண்டோ அரசு மற்றும் நாராயண நேத்ராலயா ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காயம் அடைந்தவர்களில் 142 பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்டு இருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பின்பு தற்போது பட்டாசு வெடித்ததில் 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story