மைசூரு சாமுண்டி மலையில் குஜராத் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்தது


மைசூரு சாமுண்டி மலையில் குஜராத் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்தது
x

மைசூரு சாமுண்டி மலையில் குஜராத் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்தது. 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மைசூரு:

மைசூரு சாமுண்டி மலையில் குஜராத் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்தது. 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுற்றுலா பஸ்சில் தீ

அரண்மனை நகரம், கலாசார நகரம் என்றழைக்கப்படும் மைசூரு, கர்நாடகத்தில் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் குஜராத்தில் இருந்து 50 பேர் சுற்றுலா பஸ்சில் மைசூருவுக்கு வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலை சாமுண்டி மலைக்கு பஸ்சில் சென்றனர்.

அப்போது திடீரென்று பஸ்சில் இருந்து கரும்புகை வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, உள்ளே இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கிவிட்டார். அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

50 பேர் உயிர் தப்பினர்

:இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ்சின் ஒரு பகுதியில் தீயில் எரிந்து நாசமானது. பஸ்சில் இருந்து புகை வந்ததும், சுதாரித்து கொண்டு டிரைவர் பயணிகளை கீழே இறக்கிவிட்டதால், 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் டீசல் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாமுண்டி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story