இந்தாண்டு இறுதிக்குள் கர்நாடகத்தில் 5 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படும்-போலீஸ் மந்திரி தகவல்
இந்தாண்டு இறுதிக்குள் கர்நாடகத்தில் 5 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று போலீஸ் மந்திரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறுகையில், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபோது சுமார் 22 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் காலியாக இருந்தது. தற்போது அது 9,432 ஆக உள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் 5 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படும். சட்ட ஒழுங்கை காக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப போலீசார் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். எனவே தேவைக்கு ஏற்ப அவர்கள் பொறுப்பு அடிப்படையில் இடமாற்றம் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story