பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் 6-ந் தேதி திறப்பு


பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் 6-ந் தேதி திறப்பு
x

விமான நிலைய மாதிரியில் அமைக்கப்பட்டுள்ள பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் வருகிற 6-ந் தேதி முதல் செயல்பட தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 3 ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

பெங்களூரு

விமான நிலைய மாதிரியில் அமைக்கப்பட்டுள்ள பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் வருகிற 6-ந் தேதி முதல் செயல்பட தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 3 ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

ரூ.300 கோடி செலவில்...

பெங்களூரு சிட்டி(சங்கொள்ளி ராயண்ணா) ரெயில் நிலையம் மற்றும் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றாக பையப்பனஹள்ளியில் புதிய ரெயில் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிட்டி மற்றும் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்திற்கு ஏராளமான ரெயில்கள் வருவதாலும், அங்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை கருத்தில் கொண்டும் பையப்பனஹள்ளியில் புதிய ரெயில் முனையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அதாவது அந்த ரெயில் நிலையம் விமான நிலைய மாதிரியில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக ரூ.300 கோடியில் அந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 4,200 சதுர மீட்டர் பரப்பளவில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் தினமும் 50 ஆயிரம் பயணிகள் நடமாடும் அளவுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

வருகிற 6-ந் தேதி திறப்பு

பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் 7 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு சராசரியாக 50 ரெயில்கள் வந்து செல்லும் அளவுக்கு அந்த ரெயில் நிலையத்தில் வசதிகள் உள்ளன. பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை கடந்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதமே பெரும்பாலும் முடிந்து விட்டது. ஆனாலும் பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் திறப்பு விழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், வருகிற 6-ந் தேதி பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் திறப்பு விழா கண்டு, செயல்பட தொடங்க உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு விஸ்வேசுவராயா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பானசாவடியில் இருந்து இயக்கப்படும் 3 ரெயில்கள் மட்டும் பையப்பனஹள்ளியில் இருந்து முதற்கட்டமாக இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story