டோயிங் செய்யும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தலாமா?- பொதுமக்கள் கருத்து


டோயிங் செய்யும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தலாமா?-  பொதுமக்கள் கருத்து
x

தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்யும் டோயிங் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தலாமா என்பதற்கு பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவில் தடை செய்யப்பட்ட சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது. அவ்வாறு தடை செய்யப்பட்ட சாலைகளில் நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பிரச்சினை நிலவி வந்தது. முக்கிய சாலைகளில் தடையை மீறி நிறுத்தும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் டோயிங் வாகனம் மூலம் தூக்கி செல்வார்கள்.

வாகனங்கள் சேதம்

ஆனால் இந்த விதிமுறையை மீறி போக்குவரத்து போலீசார் வாகனங்களை டோயிங் மூலம் தூக்கிச் ெசல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் டோயிங் செய்யும் வாகனங்களை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்து செல்லும் போது தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்திற்கும், டோயிங் செய்து எடுத்து சென்ற வண்டிக்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. மேலும் டோயிங் செய்து எடுத்து செல்லப்படும் இருசக்கர வாகனங்கள் சேதம் அடைவதாகவும் வாகன ஓட்டிகள் தரப்பில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதவிர டோயிங் செய்யும் போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறின. அவ்வாறு பிரச்சினை ஏற்படும் போது வாகன ஓட்டிகளை டோயிங் வாகன ஊழியர்கள் தாக்கிய சம்பவங்களும் நடந்தன. மேலும் போக்குவரத்து போலீசார் இல்லாமலேயே டோயிங் ஊழியர்கள் வாகனங்களை டோயிங் செய்து எடுத்து சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் டோயிங் நடைமுைறக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை எழுந்து வந்தது.

டோயிங் செய்ய தடை

இந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு உணவு விற்பனை ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை போக்குவரத்து போலீசார் டோயிங் செய்து எடுத்து சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த உணவு விற்பனை பிரதிநிதி தனது இருசக்கர வாகனத்தை விடுவிக்கும்படி போக்குவரத்து போலீசாரிடம் கெஞ்சினார். ஆனால் இருசக்கர வாகனத்தை போலீசார் விடுவிக்கவில்லை. இதனால் அந்த ஊழியர் டோயிங் வாகனத்தை பிடித்து தொங்கியபடி சென்ற மனதை உருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

போக்குவரத்து போலீசாரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் டோயிங் நடைமுைறக்கு அப்போதைய போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தடை விதித்தார். இதனால் டோயிங் மூலம் ேநா பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் ெசய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் டோயிங் வாகனங்களை குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிறுவனங்களின் ஊழியர்கள் டோயிங் நடைமுறை திடீெரன்று நிறுத்தப்பட்டதால் தங்களது வேலை பறிபோனது என்றும், வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது என்றும் கூறி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

மீண்டும் கொண்டு வருவது அவசியம்

அந்த மனு மீதான விசாரணையின் போது டோயிங் நடைமுறைைய மீண்டும் கொண்டு வரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து கர்நாடக அரசு 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் டோயிங் வாகனங்கள் செயல்பாடு இல்லாத காரணத்தால் பெங்களூருவில் சாலைகளில் ேநா பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்வதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறிய போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, பெங்களூருவில் மீண்டும் டோயிங் நடைமுறைைய கொண்டு வருவது அவசியம் என்று கூறினார். ஆனால் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா டோயிங் நடைமுறை மீண்டும் அமலுக்கு வராது என்று கூறியுள்ளார்.

விதிகளை மதிக்க வேண்டும்

இந்த நிலையில் டோயிங் நடைமுறைைய மீண்டும் கொண்டு வரலாமா? வேண்டாமா? என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு மக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

பிரகாஷ்நகரில் வசித்து வரும் திருமலை குமார்:- பெங்களூருவில் ேநா பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் ெசய்து தூக்கி ெசல்லும் டோயிங் நடைமுறை கொண்டு வர வேண்டும் என்பது எனது கருத்து. டோயிங் வாகனங்களின் பயன்பாடு இல்லாததால் வாகனங்களை சாலைகளில் அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. என்னை பொறுத்தவரை வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மதிக்காதவர்களின் வாகனங்களை தூக்கி செல்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ள கூடாது என்றார்.

பயன் உள்ளதாக இருக்கும்

இந்திராநகரில் வசிக்கும் உணவு விற்பனை பிரதிநிதியான அப்பு:- பெங்களூரு நகர் முழுவதும் சென்று உணவு வினியோகம் செய்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் அவசரப்படுத்தும் நேரத்தில் இருசக்கர வாகனங்களை சாலையோரம் விட்டுவிட்டு உணவு கொடுக்க செல்கிறோம்.அப்போது வந்து போலீசார் வாகனங்களை டோயிங் செய்து எடுத்து செல்கின்றனர்.

பெட்ரோல், இதர செலவுக்காக வைத்திருக்கும் பணத்தை போலீசாரிடம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து வர வேண்டி உள்ளது. இதனால் டோயிங் நடைமுறைைய மீண்டும் கொண்டு வராமல் இருந்தால் என்னை போன்ற உணவு விற்பனை பிரதிநிதிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்

டொம்லூரில் வசித்து வரும் ரவிக்குமார்:- தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது தவறு தான். ஆனால் டோயிங் செய்யும் போது வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசாரும், டோயிங் வாகன ஊழியர்களும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். டோயிங் செய்யும் வாகனங்களை எந்த போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. வாகனங்களை தேடி போலீஸ் நிலையங்களுக்கு அலையும் நிலை அதிகமாக இருந்தது. தற்போது டோயிங் இல்லாதது சற்று நிம்மதி அளிக்கிறது. டோயிங்கை மீண்டும் கொண்டு வர வேண்டாம் என்று கூறினார்.

ெடாம்லூரை ேசர்ந்த சக்திகுமார் (தனியார் நிறுவன ஊழியர்):- டோயிங் செய்து எடுத்து செல்லும் வாகனங்களை போலீசார் சரியான முறையில் கையாளுவது இல்லை. இதனால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுகிறது. இதுகுறித்து கேட்டாலும் போலீசார் சரியான முறையில் பதில் கூறுவது இல்லை. இதனால் டோயிங் நடைமுறை மீண்டும் வேண்டாம். தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போலீசார் வேறு புதிய வழியை கையாள வேண்டும் என்றார்.

புகைப்படம் எடுத்து அபராதம் வசூலிக்கும் பாணி

ராஜாஜிநகரில் வசிக்கும் மஞ்சுளா:- டோயிங் வாகனங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக உணவு விற்பனை பிரதிநிதிகளுக்கு சிரமம் அதிகமாக இருக்கும்.

அவசரமாக செல்லும் போது தெரியாமல் தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். டோயிங் செய்யப்படும் வாகனங்களை விடுவிக்க அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் டோயிங் வாகன பயன்பாடு மீண்டும் வேண்டாம் என்றார். கே.பி.அக்ரஹாராவை சேர்ந்த இல்லத்தரசியான வளர்மதி கூறுகையில்:- டோயிங் செய்து வாகனங்களை எடுத்து செல்லும் போது வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார், டோயிங் ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதுடன், தாக்கவும் செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் வசூலிக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அந்த நடைமுறை இறுதி வரை கடைப்பிடித்தால் போதும். டோயிங் வாகனங்களை திரும்ப கொண்டு வர வேண்டாம் என்றார்.

அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்

மாவள்ளி புராவை ேசர்ந்த மகாலட்சுமி என்ற இல்லத்தரசி:- ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உறவினரை பார்க்க சென்றேன். அப்போது ஆஸ்பத்திரி முன்பு ஒரு இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தினேன். அந்த இடத்தில் அறிவிப்பு பலகை எதுவும் இல்லை. ஆனாலும் எனது ஸ்கூட்டரை தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தி இருப்பதாக கூறி டோயிங் ஊழியர்கள் எடுத்து சென்றனர்.

எந்த போலீஸ் நிலையத்திற்கு ஸ்கூட்டரை கொண்டு சென்றார்கள் என்று தெரியாமல் 5 போலீஸ் நிலையங்களுக்கு சென்று சுற்றி அலைந்து கடைசியாக அபராதம் செலுத்தி ஸ்கூட்டரை மீட்டேன். சில இடங்களில் வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிப்பு பலகை எதுவும் இல்லை. முதலில் அதை போக்குவரத்து போலீசார் வைக்க வேண்டும் என்று கூறினார்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது...

பொம்மனஹள்ளியில் வசிக்கும் நரேஷ்:- வாகனங்களை டோயிங் செய்து எடுத்து செல்வதால் வாகனங்களை மீட்க போலீஸ் நிலையங்களை தேடி மக்கள் அலைகின்றனர்.

இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனம் நிறுத்தியது மற்றும் டோயிங் வாகனத்திற்கு என்று 2 கட்டணம் செலுத்துவது மக்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. இதனால் டோயிங் வாகனத்தை மீண்டும் கொண்டு வர வேண்டாம் என்றார். எது எப்படிேயா வாகன ஓட்டிகளுக்கு சிரமப்படுத்தாமல் ேபாக்குவரத்து ேபாலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் வாகன ஓட்டிகளும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாகனங்களை டோயிங் செய்யும் முன்

ேபாலீசார் 3 முறை எச்சரிக்க வேண்டும்

தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை தூக்கி செல்லும் முன்பு டோயிங் வாகனத்தில் வரும் போக்குவரத்து போலீஸ்காரர் தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை டோயிங் செய்ய உள்ளோம் என்று ஒலிபெருக்கியில் 3 முறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். அவ்வாறு அறிவித்தும் வாகனங்களின் உரிமையாளர்கள் வரவில்லை என்றால் தான் வாகனங்களை தூக்கி செல்ல வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

ஆனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஒரு தடவை ஒலிபெருக்கியில் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவதே அபூர்வமாக இருந்து வந்தது.


Next Story