சாலையோர மரத்தில் கார்கள் மோதி விபத்து - திருமண கோஷ்டியினர் 5 பேர் பலி


சாலையோர மரத்தில் கார்கள் மோதி விபத்து - திருமண கோஷ்டியினர் 5 பேர் பலி
x

சாலையோர மரத்தில் கார்கள் மோதிய விபத்தில் திருமண கோஷ்டியினர் 5 பேர் பலியாகினர்.

பாந்தா,

உத்தரபிரதேசம் மாநிலம் பாந்தா மாவட்டத்தில் உள்ள திண்ட்வாரி பகுதியில் நேற்று வாகனங்கள் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பைலானி பகுதியை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் 2 கார்களில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த கார்கள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முயன்றபோது கார்கள் சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.


Next Story