ஷேர் ஆட்டோவும் தனியார் பேருந்தும் மோதி பயங்கர விபத்து..- 6 பெண்கள் பலி!
ஆந்திர மாநிலத்தில் தனியார் பேருந்து ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமராவதி,
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே தனியார் பேருந்தும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனியார் பேருந்து அதிவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story