கத்தியால் குத்தி தச்சு தொழிலாளி கொலை


கத்தியால் குத்தி தச்சு தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தச்சு தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சம்பிகேஹள்ளி:-

குத்திக்கொலை

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவலிங்கப்பா நகரில் வசித்து வந்தவர் சல்மான்(வயது 20). தச்சு தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவா் தனது மோட்டார் சைக்கிளை பழுது நீக்குவதற்காக ஹெக்டே நகர் 15-வது கிராசில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த 2 பேர் சல்மானை திட்டினர். அந்த 2 பேரிடமும் சல்மான் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சல்மானை சரமாரியாக குத்தினர். இதில் வயிற்று பகுதியில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த சல்மான் பரிதாபமாக இறந்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதுபற்றி அறிந்ததும் சம்பிகேஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சல்மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்று கொண்டனர்.

சல்மானை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story