போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு


போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாதியை சொல்லி திட்டியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ். இவரது சகோதரர் வசந்த். வீட்டை காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு, வசந்த் தனது சகோதரர் மீது அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த கிரண் என்பவர், ஹரீஷ் வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்ய முயன்றுள்ளார்.

மேலும், ஹரீசை சாதியை குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். அதுதொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கிரண், புலிகேசிநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது புலிகேசிநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரண் மீது வழக்குப்பதிவு

செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் அசோக்நகர் போலீசார் கிரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.


Next Story