கடந்த 4 ஆண்டுகளில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக 4,500 வழக்குகள் பதிவு


கடந்த 4 ஆண்டுகளில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக 4,500 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக 4,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. அதிவேகமாக மற்றும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் பதிவாகின்றன. இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் 1,187 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாநில உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றதாக 4 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 1,187 வழக்குகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளன. 4 ஆயிரத்து 500 வழக்குகளில் 952 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்துகளில் 3,807 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டில் 284 பேரும், 2020-ம் ஆண்டில் 221 பேரும், 2021-ம் ஆண்டில் 182 பேரும், 2022-ம் ஆண்டில் 247 பேரும், நடப்பு ஆண்டில் ஜனவரில் மாதத்தில் 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story