காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் - தமிழக அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்பு
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
புதுடெல்லி,
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கும் வகையில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், 2018-ல் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்னோ, காவிரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியிம் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்கு இன்றே பரிந்துரைக்கப்படும். தண்ணீர் திறக்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு இன்றே பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாளைய கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்படவுள்ளது.
Related Tags :
Next Story