எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

Image courtesy: PTI

எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், "எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பும்.

மத்திய அரசு சாமானியர்களை பற்றி கவலைப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதில் மட்டுமே தங்கள் கவனத்தை செலுத்துகிறார்கள். அவர்கள் எந்த தலைவரையும் கைது செய்யலாம், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி யாரையும் தொந்தரவு செய்யலாம், ஆனால் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எரிபொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. எரிபொருட்களின் விலை மட்டுமல்ல, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கோதுமை மாவுக்கு வரி விதித்த முதல் அரசு இது தான்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story