பா.ஜனதா பெண் பிரமுகர் சோனாலி மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை மத்திய அரசு உத்தரவு


பா.ஜனதா பெண் பிரமுகர் சோனாலி மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை மத்திய அரசு உத்தரவு
x

அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்தவர் சோனாலி போகத். பா.ஜனதா பெண் பிரமுகர்.

புதுடெல்லி,

அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்தவர் சோனாலி போகத். பா.ஜனதா பெண் பிரமுகர். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி, கோவாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம், கொலையாக கருதப்படுகிறது. கோவா போலீசார் விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சவந்த், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சோனாலி போகத்தின் மகள் உள்பட அரியானாவை சேர்ந்த சிலரின் வேண்டுகோள் காரணமாக, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கடிதம் எழுதியதாக பிரமோத் சவந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.


Next Story