'சந்திரயான்-3 அறிவியல் சமூகத்தின் உழைப்புக்கு கிடைத்த பலன்' - ராகுல் காந்தி வாழ்த்து


சந்திரயான்-3 அறிவியல் சமூகத்தின் உழைப்புக்கு கிடைத்த பலன் - ராகுல் காந்தி வாழ்த்து
x

இஸ்ரோவில் உள்ள ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் 179 கீ.மீ. தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலவுக்கான பயணத்தை சந்திரயான்-3 விண்கலம் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இன்று, கோடிக்கும் அதிகமான நமது மக்கள் பெருமிதத்துடன் வானத்தைப் பார்த்து மகிழ்கிறோம்.

சந்திரயான்-3 என்பது 1962-ல் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதைத் தொடர்ந்து 1969-ல் இஸ்ரோ உருவாக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகம் பல தசாப்தங்களாக மேற்கொண்ட கடினமான உழைப்பின் பலனாகும்,

இந்த பணியின் வெற்றி, சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக நம்மை மாற்றும். உண்மையிலேயே நம்பமுடியாத சாதனை! இஸ்ரோவில் உள்ள ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.




Next Story