வனத்துறையினரிடம் சிக்காமல் சுற்றித்திரியும் சிறுத்தை


வனத்துறையினரிடம் சிக்காமல் சுற்றித்திரியும் சிறுத்தை
x

ஊருக்குள் புகுந்து இருபத்தைந்து நாட்கள் ஆகியும் சிறுத்தை ஒன்று வனத்துறையினரிடம் சிக்காமல் சுற்றித்திரிந்து வருகிறது.

பெலகாவி:

பெலகாவி டவுன் ஜாதவ் நகருக்குள் கடந்த 5-ந் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. சிறுத்தை பீதியால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க 9 கூண்டுகள், 23 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். சிறுத்தையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டது.


ஆனால் சிறுத்தை வனத்துறையினரிடம் சிக்கவில்லை. இதனால் பெண் சிறுத்தையைக் கொண்டு, சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. சிறுத்தை ஊருக்குள் புகுந்து 25 நாட்கள் ஆகியும் வனத்துறையினரிடம் பிடிபடவில்லை. சிறுத்தை பிடிபடாததால் பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழ ஆரம்பித்துள்ளன.


Next Story