சத்தீஷ்கார் ஐகோர்ட்டு நீதிபதி தெலுங்கானாவுக்கு மாற்றம்சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் சிபாரிசு
சத்தீஷ்கார் ஐகோர்ட்டு நீதிபதி பி.சாம் கோஷி, வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் கோரினார்.
புதுடெல்லி,
சத்தீஷ்கார் ஐகோர்ட்டு நீதிபதி பி.சாம் கோஷி, வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் கோரினார்.
அதை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், நீதிபதி சாம் கோஷியை மத்தியபிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்ய கடந்த 5-ந் தேதி சிபாரிசு செய்தது. இருப்பினும், நீதிபதி சாம் கோஷி, மத்தியபிரதேசத்தை தவிர, வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரை தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு மாற்ற கொலீஜியம் சிபாரிசு செய்துள்ளது. நேற்று நடந்த கொலீஜியம் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story