உணவு வாங்கித்தருவதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை..! இளைஞர் கைது
சத்தீஸ்கரில் காலை உணவு வாங்கி தருவதாக ஏமாற்றி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலாஸ்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் காலை உணவு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிலாஸ்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திர ஜெய்ஸ்வால் கூறுகையில், "காலை உணவை வாங்கி தருவதாக கூறி இளைஞர் ஒருவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சகர்பத்தா காவல் நிலையப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் அந்த நபர் காலை உணவு ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்து சிறுமியை பைக்கில் ஏற்றிச் சென்றார். பின்னர் சிறுமியை ஒரு பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகே குற்றவாளியை கண்டுபிடிக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அந்த அதிகாரி கூறினார்.