முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந்தேதி சாம்ராஜ்நகர் வருகை


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந்தேதி சாம்ராஜ்நகர் வருகை
x
தினத்தந்தி 2 Dec 2022 2:09 AM IST (Updated: 2 Dec 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந் தேதி சாம்ராஜ்நகருக்கு வருகை தர இருக்கிறார்.

கொள்ளேகால்:-

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந்தேதி சாம்ராஜ்நகருக்கு வர உள்ளார். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு சாம்ராஜ்நகரிலும், மதியம் 1 மணிக்கு ஹனூரிலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் மதியம் 3 மணி அளவில் மலை மாதேஸ்வரா கோவிலில் நடக்கும் மேம்பாட்டு ஆணைய கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பங்கேற்கிறார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


Next Story