முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் அரசு கார்களை ஒப்படைத்தனர்


முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் அரசு கார்களை ஒப்படைத்தனர்
x

அரசு காருக்கு பூஜை நடத்தி பிரியாவிடை கொடுத்த மந்திரி

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசு கார்களை அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

பெங்களூருவில் பசவராஜ் பொம்மை தனது காரை அரசுக்கு ஒப்படைத்ததை அடுத்து அவர் தனது சொந்த காரில் பயணம் செய்ய தொடங்கினார். அதுபோல் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட சித்தராமையா, தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததும் தான் பயன்படுத்தி வந்த அரசு காரில் இருந்து இறங்கி தனக்கு சொந்தமான காரில் பயணத்தை தொடர்ந்தார்.

மந்திரிகளும் தங்களின் அரசு கார்களை அரசிடமே ஒப்படைத்தனர். அவர்களின் கார்கள் பெங்களூருவில் உள்ள குமரகிருபா விருந்தினர் மாளிகையில் நிறுத்தப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் உள்ள தனது வீட்டில் வைத்து அரசு காரை திரும்ப ஒப்படைத்தார். அப்போது அந்த காருக்கு சிறப்பு பூஜை செய்து தேங்காய் உடைத்து வணங்கி காரை ஒப்படைத்தது அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. தான் மந்திரியாக வலம் வந்த காருக்கு அவர் பிரியா விடை கொடுத்தார்.


Next Story