கொரோனா தொற்றுக்கு பிறகு சீன அதிபர் ஜின்பிங் முதல் முறையாக வெளிநாடு பயணம்


கொரோனா தொற்றுக்கு பிறகு  சீன அதிபர் ஜின்பிங் முதல் முறையாக வெளிநாடு பயணம்
x

சீன அதிபர் ஜின்பிங் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.

பீஜிங்,

கொரோனா தொற்று பரவல் காரணமாக சீன அதிபர் ஜின்பிங் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். கடைசியாக அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 நாள் பயணமாக மியான்மருக்கு சென்றார். அதன் பிறகு சீனாவை விட்டு வெளியேறாத அவர் அனைத்து உலகளாவிய நிகழ்வுகளிலும் காணொலி காட்சி வாயிலாகவே பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் அதிபர் ஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக 14-ந்தேதி கஜகஸ்தான் செல்லும் அவர், பின்னர் அங்கிருந்து உஸ்பெகிஸ்தானுக்கு செல்கிறார். அங்கு சமர்கண்ட் நகரில் 15, 16 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story