உத்தரகாண்ட்: ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து - 6 பேர் பலி
உத்தரகாண்டில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று மதியம் 12.15 மணியளவில் பயணம் மேற்கொண்டது. அந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்தனர்.
கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story