ஒடிசாவில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடமாகும் கொரோனா


ஒடிசாவில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடமாகும் கொரோனா
x

நமது மாநிலம் ஏற்கனவே 3 கொரோனா அலைகளை அனுபவித்து, 4-வது அலைக்கு தயாராகி வருகிறது.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் கொரோனாவை கையாளுதல் மற்றும் பருவநிலை மாற்றம் பாடங்களாக இடம் பெறும் என மாநில கல்வி மந்திரி எஸ்.ஆர்டாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நமது மாநிலம் ஏற்கனவே 3 கொரோனா அலைகளை அனுபவித்து, 4-வது அலைக்கு தயாராகி வருகிறது. எனவே எதிர்காலத்தில் இளைய தலைமுறையை தயார்படுத்துவதற்காக, தொற்றுநோய் பற்றிய ஆய்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

இவ்வாறு கல்வி மந்திரி எஸ்.ஆர்.டாஸ் கூறினார்.


Next Story