கெட்ட கனவுகள், தூக்க வியாதியால் 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
இமாசல பிரதேசத்தில் கெட்ட கனவுகள் மற்றும் தூக்க வியாதியால் பாதிக்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குல்லு,
இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் பஞ்சார் பகுதியில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தூங்கும்போது, அடிக்கடி கெட்ட கனவுகள் வந்துள்ளன.
இதனால், நள்ளிரவில் தூக்கத்தின் நடுவே எழுந்து விடுவார். இதனையடுத்து, அவருக்கு தூக்கம் கெட்டு, உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளது. இந்த அவதியால் வருத்தமடைந்திருந்த அவர், கடந்த ஆறேழு நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவரது சகோதரி நேற்று வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவரது சகோதரர் உயிரிழந்து கிடந்து உள்ளார். இதுபற்றி குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அதன்பின் போலீசார் தகவல் அறிந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அதன்பின் மாணவரின் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெற்று கொண்டனர். இந்த சம்பவத்தில் தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தனக்கு ஏற்பட்ட தூக்க பாதிப்பு, கெட்ட கனவுகளை மாணவர் குறிப்பிட்டு உள்ளார்.