சிக்கமகளூரு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் தொடங்கின
தற்காலிக இடத்தில் சிக்கமகளூரு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கியது.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு அருகே கதரிமிதிரி பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 60 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், மருத்துவ கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கை நடந்தது. இதில் 141 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் முடியும் வரை தேகூரில் உள்ள பள்ளி கட்டித்தில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தேகூரில் உள்ள பள்ளி வளாகத்தில் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி அங்கு நடந்த நிகழ்ச்சியில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வகுப்பை தொடங்கி வைத்து பேசுகையில், சிக்கமகளூரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. ஆனாலும் மாணவர்கள் சேர்க்கை நடந்து, வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் முடிவடையும் வரை தேகூரில் உள்ள பள்ளியில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.