டெல்லியில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு


டெல்லியில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

டெல்லியில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வாட்டி வதைத்தது. இதனால், அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு இன்று அதிகபட்ச வெப்பநிலை 42.4 டிகிரி செல்சியஸாக பதிவானது.

இந்த நிலையில், டெல்லியில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் வடமேற்கு இந்தியாவில் ஈரமான மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

இதன் மூலம் தலைநகர் டெல்லியில் வரும் 24 ஆம் தேதி வரை வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story