நிலக்கரி சுரங்க விவகாரம்: நாடாளுமன்றத்தில் தி.மு.க. கவன ஈர்ப்பு நோட்டீஸ்


நிலக்கரி சுரங்க விவகாரம்: நாடாளுமன்றத்தில் தி.மு.க. கவன ஈர்ப்பு நோட்டீஸ்
x

கோப்புப்படம்

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் ஏல அறிவிப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதில் பிரதமர் மோடியின் தலையீட்டைக் கோரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த திட்டத்துக்கு அ.தி.மு.க.வும் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப தி.மு.க. முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் நேற்று அளிக்கப்பட்டது.

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் நிலக்கரித்துறை மந்திரி உரிய பதிலை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவை செயலாளரிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த நோட்டீசை அளித்தார்.


Next Story