வேலை வாங்கி தருவதாக அழைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்


வேலை வாங்கி தருவதாக அழைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்
x

போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்கி, வேலை தருவதாக கூறி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:-

பலாத்காரம்

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியில் 21 வயது இளம் பெண் வசித்து வருகிறார். கல்லூரி மாணவியான அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மோனிக்கா என்ற பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மோனிக்கா, இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.

மேலும், தான் கூறும் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளவும், அவர்கள் கூறும் இடத்திற்கு செல்லுமாறு கூறி உள்ளார். முன்னதாக இளம்பெண்ணின் நிர்வாண படங்களை மர்ம நபர் கேட்டுள்ளார். வேலை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இளம்பெண்ணும் தனது நிர்வாக படங்களை மர்ம நகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அவரை மர்மநபர் தொடர்பு கொண்டார். அப்போது அவர், மடிவாளா பகுதியில் உள்ள விடுதிக்கு வருமாறு இளம் பெண்ணை அழைத்துள்ளார்.

அந்த பெண்ணும் மர்மநபர் கூறிய விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை மர்மநபர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், வெளியே கூறவேண்டாம் எனவும் கூறி உள்ளார். எனினும், இளம்பெண் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் செல்போன் எண்களை கொண்டு விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

மேலும், இதில் தொடர்புடையதாக வாலிபர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த பிரசாத் என்ற தில்லி பிரசாத் என்பதும், அவர் தற்போது ஆர்.ஆர்.நகர் பகுதியில் வசித்து வருவதும் தெரிந்தது.

சாப்ட்வேர் என்ஜினீயரான அவர் இன்ஸ்டாகிராமில் பெண்கள் பெயர்களில் போலியாக கணக்குகள் தொடங்கி, இளம்பெண்களுடன் நட்பு ஏற்படுத்திவிட்டு, வேலை தருவதாக அவர்களை அழைத்து வந்து பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த செல்போனை தடயஅறிவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story